திரையரங்குகளில் ‘புறம்போக்கு’ டீஸர்…

Purambokku_00004யு டிவி தயாரிப்பில் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா மற்றும் பலர் நடிக்க பரபரப்பாக உருவாகி வரும் ‘புறம்போக்கு’ படத்தின் டீஸர் ‘அஞ்சான்’ படத்துடன் இணைக்கப்பட்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.

இது குறித்து படத்தின் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் கூறுகையில்,

“புறம்போக்கு’ படத்தின் முதல் டீஸர் வண்ணமயமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். இந்த டீஸரில் ஆர்யாவுக்கும், கார்த்திகாவுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். அடுத்தடுத்த டீஸர்கள் இன்னும் பிரமாதமாகவும், படத்தின் கருவை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கும்.

இந்த டீஸரில் விஜய் சேதுபதியின் தோற்றத்தைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் கண்டிப்பாக அதிசயப்படுவார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் படமாக்கப்பட்டு வருகின்றன. அவை படத்தின் ஹைலைட்டாக அமையும்.

நட்சத்திரங்களின் ஈடுபாடும், தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமையும் இந்தப் படத்தை ஒரு முழுமையான மாஸ் திரைப்படமாகக் கொண்டு வரும். ஆர்யா, விஜய் சேதுபதி, கார்த்திகா இவர்களோடு ஷாம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் வெளிவந்த பின் ஷாம் மற்ற ஹீரோக்களைப் போல் ஒரு தனி இடத்தைப் பிடிப்பார்,” என்கிறார் ஜனநாதன்.

‘புறம்போக்கு’ படத்தில் ஒரு சர்வதேசப் பிரச்சனையைத்தான் இயக்குனர் ஜனநாதன் கதையாக எடுத்திருக்கிறாராம்.

Read Previous

புலிப் பார்வை – இசை வெளியீடு – மாணவர்கள் மீது தாக்குதல்…

Read Next

திருடன் போலீஸ் – செப்டம்பர் மாதம் ரிலீஸ்…

Most Popular