வையம் மீடியாஸ் சார்பில் வி.பி. விஜி தயாரித்து, இயக்கி உள்ள படம் ‘எழுமின்’.
விவேக், தேவயானி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்திற்காக ஒரு பாடலை தனுஷ் பாடியிருக்கிறார். கணேஷ் சந்திரசேகர் இசையில் தமிழணங்கு வரிகளில் ‘எழடா…எழடா…’ என்று பாடியிருக்கிறார்.
‘படிக்காதவன், உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, வேலையில்லா பட்டதாரி 1,2’ ஆகிய படங்களில் தனுஷுடன் இணைந்து நடித்து காமெடியில் கலக்கியவர் விவேக். அவருடைய நட்புக்காக தனுஷ் இந்தப் படத்தில் பாடிக் கொடுத்திருக்கிறார்.
“படத்தின் திரைக்கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் உத்வேகம் பொருந்திய இப்பாடலை, தனுஷ் பாடினால் தான் சரியாக அமையும் என விவேக் சொன்னார். அவரும் கேட்டதும் பாடிக் கொடுத்தார். தனுஷின் குரல் இந்தப் பாடலுக்கு மட்டுமல்லாமல், படத்திற்கும் பலமாக அமைந்திருக்கிறது,” என்கிறார் இயக்குனர் வி.பி.விஜி.
‘எழுமின்’ விரைவில் திரைக்கு வருகிறது.