“புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள்” ஆகிய படங்களைத் தொடர்ந்து சாம் சி.எஸ் இசையமைக்கும் படம் ‘வஞ்சகர் உலகம் ‘.,
வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தின் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம், யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார்.
யுவனும் சம்மதம் சொல்ல ஒரு ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் உருவாக்கி யுவனை பாட வைத்துள்ளார் சாம்.
விரைவில் வெளிவர உள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறும் என்கிறார் சாம்.