’மெட்ராஸ்’ தள்ளிப் போக உண்மைக் காரணம் என்ன… ?

karthi-in-madrasகார்த்தி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்துள்ள ‘மெட்ராஸ்’ படம் கடந்த ஜுலை மாதமே வெளியாகவதாக இருந்தது. ஆனால், கார்த்தியின் அண்ணன் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படம் வெளியான பின் அப்படத்தை வெளியிடலாம் என முடிவு செய்து தள்ளி வைத்தனர்.

‘அஞ்சான்’ திரைப்படம் வெளிவந்துவிட்டதால் செப்டம்பர் மாதம் படத்தை வெளியிடலாம் என முடிவு செய்திருந்தனர். இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம். அக்டோபர் மாதத்தில் படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘மெட்ராஸ்’ படம் முழுவதும் முடிவடைந்த பின்னரும் படத்தை வெளியிடாமல் தாமதிப்பது ஏன் என நாம் கோடம்பாக்கத்தில் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன.

அதாவது ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கியுள்ள ‘அட்டகத்தி’ ரஞ்சித், இதற்கு முன் ஒரு இயக்குனரிடம் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறார். அப்போது அந்த இயக்குனர் உருவாக்கிய கதைதான் ‘மெட்ராஸ்’ படத்தின் கதைதான். அந்த இயக்குனர் இயக்கிய படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று பின்னர் நின்று போயிருக்கிறது.

‘மெட்ராஸ்’ படத்தின் இசை வெளியீடு நடந்து அந்த படத்தைப் பற்றிய சில விவரங்கள் வெளிவந்த பின் சுதாரித்துக் கொண்ட அந்த இயக்குனர், அதிர்ச்சியடைந்து அவருடைய கதையைத்தான் ரஞ்சித் ‘மெட்ராஸ்’ படமாக எடுத்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறதாம். அது இன்னும் முற்றுப் பெறாததாலேயே ‘மெட்ராஸ்’ படத்தின் வெளியீட்டையும் தள்ளிக் கொண்டு வருகிறார்கள் என்கிறார்கள்.

கார்த்திக்கு தொடர்ச்சியாக சில படங்கள் தோல்வியடைந்ததால ‘மெட்ராஸ்’ படத்தைத்தான் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்போது அந்தப் படம் சிக்கலில்லாமல் வெளியானால்தான் அவரால் வெற்றி பெற முடியும்.

விரைவில் இந்தக் கதைப் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்கிறார்கள்.

Read Previous

அட…லட்சுமி மேனன் நல்லா பாடியிருக்காங்களே…!!

Read Next

பணம் வரும் வழியை கண்டுபிடிக்க வேண்டும் – வசந்தபாலன் வேண்டுகோள்…