‘ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து கண்ணன் இயக்கி வரும் படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’.
இப்படத்தில் விமல், பிரியா ஆனந்த், சூரி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்காக பத்திரிகையாளர் ஏக்நாத் எழுதிய பாடல் ஒன்றை நடிகை லட்சுமி மேனன் பாடியுள்ளார். இந்தப் பாடல் காட்சியின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. “அட…லட்சுமி மேனன் நல்லாத்தானே பாடியிருக்காங்க” என இப்பாடல் பேச வைத்துள்ளது.
இப்பாடலுக்கு நடிகை இனியா நடனமாடியிருக்கிறார். இதற்கு முன் ‘பாண்டிய நாடு’ படத்தில் லட்சுமி மேனனுக்காக நடிகை ரம்யா நம்பீசன் ‘ஃபை ஃபை..’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.
தற்போது லட்சுமி மேனன் நடிகை இனியாவிற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது. மூவருமே மலையாள நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் பாடகியாகவும் ஆகிவிட்டார்கள். அப்ப…அடுத்து இனியா பாடகி ஆவாரோ…
லட்சுமி மேனன் பாடிய பாடல் வீடியோ…