எந்த தாதாக்கும் பயப்படமாட்டேன்…விஷால் அதிரடி…

vishal birthday newsநடிகரும், தயாரிப்பாளருமான விஷால் நேற்று அவருடைய பிறந்தநாளைக் நேற்றுக் கொண்டாடினார்.  அதோடு புதிதாக ஆடியோ நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“என்னிடம் காசு இல்லாத போதே பல நல்ல விஷயங்களுக்கு உதவி செய்திருக்கிறேன். அப்படியிருக்கும் போது இப்போது கையில் காசு இருக்கிறது, இன்னும் பல நல்ல விஷயங்களை செய்ய ஆசைப்படுகிறேன். அரசியலுக்கு வந்துதான் பொதுமக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றில்லை. அரசியலுக்கு வராமலும் நல்லது செய்யலாம்.

அரசியல்லி வரவேண்டும் என்றால் நான் கல்லூரியில் மீண்டும் சேர்ந்து பொலிட்டிக்கல் சயின்ஸ் படிக்க வேண்டும். இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை. எந்த அரசியல் கட்சியிலும் சேரவும் மாட்டேன்.

திருட்டு விசிடியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்காக ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களும் இறங்க வேண்டும். திரையுலகில்  அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் விசிடியை ஒழித்துவிடலாம். படத்தில் மட்டும் அநியாயத்தை தட்டிக் கேட்பவனாக இருக்க விரும்பவில்லை, நிஜத்திலும் அப்படியே இருக்க விரும்புகிறேன்.

எந்த பெரிய தாதாவாக இருந்தாலும் பயப்படமாட்டேன். திருட்டு விசிடி என் படுக்கை அறைக்குள் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன். இதற்காக என் உயிரைக் கொடுக்கவும் தயார்.

நடிகர் சங்கத்ற்கனெ புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று என்னைப் போலவே ஜீவா, கார்த்தி, ஆர்யா போன்றவர்கள் ஆசைப்படுகிறோம். இதற்காக சம்பளமே வாங்காமல் நடித்துத் தரவும் தயாராக இருக்கிறோம், ” என்றார் விஷால்.

 

 

Read Previous

இன்றைய ரிலீஸ் – 5 படங்கள்

Read Next

அணையை அசுத்தப்படுத்திய ‘லிங்கா’ குழுவினர்…