தமிழ் சினிமாவின் அடுத்த கதைத் திருட்டு ‘சலீம்…

salim-and-bing-bangதமிழ்த் திரையுலகில் முன்பெல்லாம் எப்போதோ ஒரு முறைதான் கதைத் திருட்டு நடக்கும். ஆனால், இன்று அறிமுகமாகும் பல இயக்குனர்கள் கொரியன், ஜப்பான், ஈரான் போன்ற படங்களிலிருந்து கதைகளைத் திருடி படத்தை எடுத்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களின் வீச்சு அதிகமாகி விட்ட காரணத்தால் அந்த கதைத் திருட்டுக்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் கிண்டலக்கப்பட்டு வருகின்றன.

அப்படி சமீபத்தில் “ஜிகர்தண்டா, சரபம்” ஆகிய படங்கள் கொரியன், ஜப்பான் படங்களிலிருந்து திருடப்பட்டு எடுக்கப்பட்டதை பல ரசிகர்களும் கிண்டலடித்தார்கள். இது தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள கற்பனை வறட்சியைத்தான் காட்டுகிறது.

இப்போது, சில நாட்களுக்கு முன் வெளிவந்த ‘சலீம்’ திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியான ‘பிங் பாங்’ என்ற கொரியன் திரைப்படத்திலிருந்து கதையைத் திருடி படத்தை எடுத்துள்ளார்கள். விஜய் ஆண்டனி இந்தப் படத்தைத் தயாரித்து, நாயகனாகவும் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது கூட ‘சலீம்’ படத்தை 30 பாகங்கள் வரை கூட எடுக்கலாம். அவ்வளவு விஷயம் கதையாக இருக்கிறது என்று சொன்னார். அதன் அர்த்தம் இப்போதுதான் விளங்குகிறது. அப்படியென்றால் அவர்களிடம் எத்தனை கொரியன் பட சிடிக்கள் இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆங்கிலப் படங்கள் தற்போது தொலைக்காட்சிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதால் சிறு குழந்தைகள் கூட அந்தப் படங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்கிறார்கள். அதனால் தான் கொரியன், ஜப்பான் பக்கம் புதிய இயக்குனர்கள் சென்று விட்டார்கள் போலிருக்கிறது.

திருட்டு விசிடியைப் பற்றி தீவிரமாக எதிர்க்கும் திரைத் துறையினர், அதே போல் இந்த கதைத் திருடர்களையும் எதிர்ப்பார்களா  என்பதே சராசரி ரசிகனின் கேள்வி.

Read Previous

இந்திய – ஜப்பான் தயாரிப்பில் ‘ஜம்போ 3D’…

Read Next

ரஜினியை நேசிக்கும் ஜப்பான் ரசிகர்…வீடியோ இணைப்புடன்…