தொடர்ந்து நல்ல படமா பண்ணுவேன் – கார்த்தி உறுதி…

madras success karthi speech news‘பருத்தி வீரன்’ படத்திற்குப் பிறகு கார்த்திக்கு ஒரு சரியான அடையாளத்தைக் கொடுத்திருக்கும் படமாக ‘மெட்ராஸ்’ படம் அமைந்தருக்கிறது. ‘பருத்தி வீரன்’ படத்திற்குப் பிறகு “பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை” ஆகிய படங்கள் அவருக்கு கமர்ஷியல் வெற்றிப் படங்களாக அமைந்தாலும், அடுத்தடுத்து வந்த படங்கள் அவருக்கு தோல்வியைத்தான் கொடுத்தன.

அந்த தோல்விகளை இந்த ‘மெட்ராஸ்’ படம் சரி செய்துவிட்டது. அந்த மகிழ்ச்சியை பத்திரிகையாளர்களிடம் வெளிப்படுத்துவதற்காக ‘மெட்ராஸ்’ படக் குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது கார்த்தி பேசியதாவது,

‘மெட்ராஸ்’ படத்துல நடிச்சிருக்கிற பலரையும் அறிமுகப்படுத்தணும்கறதுக்காகத்தான் இன்னைக்கு நாங்க உங்களை சந்திக்கிறோம். படம் பார்க்கிற எல்லாருமே யாருப்பா அந்த ஜானி, அன்பு, மேரின்னு கேக்கறாங்க. அந்த மாதிரி பல கேரக்டர்கள்லயும் நடிச்சிருக்கிற நடிகர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறதுல பெருமைப்படறோம்.

இணைய தளங்களோட விமர்சனங்கள்ல இந்தப் படத்தைப் எல்லாருமே பார்க்கணும்னு சொல்ல வச்ச உங்களுக்கு நன்றி. சில விஷயங்கள்லாம் நாங்க பண்ணியிருக்கிறமான்னே தெரியலை. அந்த அளவுக்கு உன்னிப்பா கவனிச்சி எழுதியிருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி. நிறைய முறை தவறுகளை சுட்டிக் காட்டியிருக்கீங்க. இந்த முறை கரெக்டா பண்ணியிருக்கோம்னு சொல்லும் போது அதை விட பெரிய விஷயம் எதுவுமேயில்லை.

பிரஸ் ஷோ முடிஞ்சி நீங்க எல்லாரும் கைய பிடிச்சி வந்து பாராட்டினதுக்கப்புறம்தான் எனக்கு நம்பிக்கையே வந்துச்சி. தியேட்டர்ல கிடைக்கிற ரெஸ்பான்ஸ் எதிர்பார்க்காத அளவுக்கு இருக்கு. ஒவ்வொரு 5 வருஷம் நாம புதுப்பிச்சிட்டேயிருக்கணும். இந்த படத்தோட டீம் நல்ல டீம். இவங்க கூட வொர்க் பண்ணதுல நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். இயக்குனர் ரஞ்சித்தோட அயராத உழைப்பும் அவரோட டீமும் அந்த அளவுக்கு உழைச்சிருக்காங்க.

இந்தப் படம் நல்ல படமா வரும்னு கதையைக் படிக்கும் போது நம்புனேன், ரஞ்சித் மேல பெரிய நம்பிக்கை வந்துச்சி.

நல்ல படம் எடுத்தால் இந்த உலகமே நம்மள தூக்கி வைக்கும்னு இந்தப் படம் பெரிய உதாரணம். தொடர்ந்து நல்ல படமா பண்ணணும்னு ட்ரை பண்றேன், எப்பவுமே ட்ரை பண்ணிட்டிருக்கேன்,” என்றார் கார்த்தி.

Read Previous

தயாரிப்பாளர் டி.சிவா பற்றி வெளியான செய்திக்கு மறுப்பு…

Read Next

75வது நாளில் தனுஷின் 25வது படம்…