75வது நாளில் தனுஷின் 25வது படம்…

VIP_00018தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா மற்றும் பலர் நடித்து  ஜுலை 18ம் தேதி வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இப்படத்தை தமிழகம் முழுவதும் திரையிட்டது.

தொடர்ச்சியாக ஒரு சில தோல்விப் படங்களில் நடித்திருந்த தனுஷை ‘வேலையில்லா பட்டதாரி’ படம் மீண்டும் பழையபடி எழுச்சி பெறச் செய்தது. அவரை இப்படித்தான் பார்க்க விரும்புகிறோம் என்று சொல்லி ரசிகர்கள் அந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கினார்கள்.

சுமார் 40 கோடிக்கும் மேல் படம் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் யதார்த்தமான நடிப்பும், படத்தில் உள்ள சென்டிமென்ட்டும் படத்திற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்ததாக விமர்சகர்களும் தெரிவித்தனர்.

அமலா பால், சரண்யா, சமுத்திரக்கனி, விவேக் மற்றும் படத்தில் நடித்துள்ள அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அனிருத்தின் இனிமையான பாடல்கள் படத்தை மேலும் மெருகூட்டியது.

தனுஷின் 25வது படமாக வெளிவந்த இந்த ‘வேலையில்லா பட்டதாரி’ இன்று 75வது நாளைத் தொட்டிருக்கிறது.

Read Previous

தொடர்ந்து நல்ல படமா பண்ணுவேன் – கார்த்தி உறுதி…

Read Next

இன்னும் கல்யாண வயசு வரலை… – அஞ்சலி

Most Popular