பீக்காக் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.என்.துரை சிங் இயக்கத்தில் ராம் ஜீவன் இசையமைப்பில் ஹேமந்த் குமார், அவந்திகா மோகன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆலமரம்’.
தற்போது பல திகில் படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இந்த ‘ஆலமரம்’ படமும் இடம் பெற வாய்ப்புள்ளது.
இயக்குனர், நடிகர் கே.பாக்யராஜிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்த எஸ்.என்.துரைசிங் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
“பொதுவாக திகில் படங்களில் வரும் அந்நிய வாடை என் படத்தில் இருக்காது. நம் மண்ணின் மனதை சார்ந்த ஒரு காதல் கதையைதான் நான் திகில் கலந்து சொல்லி இருக்கேன் , இது எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் . புதிய இசை அமைப்பாளர் ராம்ஜீவன் ,அவர்களின் இசையில் வெளிவந்து பிரபலமான இந்த படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரும் விளம்பர வரவேற்பை பெற்று தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார் இயக்குனர் துரைசிங்.
அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் ‘ஆலமரம்’ வெளிவர உள்ளது.