ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் அடுத்ததாக தயாரித்து வெளியிடும் படம் ‘குற்றம் கடிதல்’.
இப்படம் ஜிம்பாப்பே நாட்டில் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடக்க உள்ள 14வது ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள உள்ளது. அடுத்து மும்பையில் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடக்க உள்ள 16ஆவது திரைப்பட விழாவில் ‘இந்திய திரை அரங்கில் புதிய முகங்கள்’ என்ற தகுதியின் கீழ் திரையிடப்பட உள்ளது.
தமிழ்ப் படங்களில் ‘ஆயிரத்தில் ஒருவன், ஆரண்யா காண்டம்’ அடுத்து ‘குற்றம் கடிதல்’ படம்தான் மும்பை திரைப்படவிழாவில் திரையிடப்பட உள்ளது.
இந்த மாதிரியான திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரம் , ஒரு திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய ஒரு வலுவான கருத்து உருவாக பெரிதளவு உதவுகிறது.
படத்தைப் பற்றி இயக்குனர் பிரம்மா.G கூறும் போது “கடிதல் என்றால் கண்டித்தல் அல்லது கடிந்து கொள்ளுதல் என பொருள். ஐந்து பல்வேறு வாழ்க்கைத் தரத்தைச் சேர்ந்த மக்களின் ஒரு நாள் வாழ்க்கை , அந்த ஒரு நாளில் ஏற்படும் சம்பவம் , அதன் அடிப்படையில் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை சித்தரிக்கும் கதைதான் ‘குற்றம் கடிதல்’. என்னுடைய இந்தக் கருத்தை படமாக்க உதவிய எனது தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அவரது நிறுவனமான ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் கிறிஸ் பிக்சர்ஸ் கிறிஸ்டி அவர்களுக்கும் நன்றி,” என்கிறார் இயக்குனர் பிரம்மா.