‘காற்றின் மொழி’ – அக்டோபர் 18 வெளியீடு

ஹிந்தியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சூலு’ படம் தமிழில் ‘காற்றின் மொழி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது

ஹிந்தியில் வித்யா பாலன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை தமிழில் ஜோதிகா ஏற்று நடித்துள்ளார். மேலும், விதார்த், லட்சுமி மஞ்சு, குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உறவினரான காஷிப் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமையுடன் முழுவதுமாக முடிவடைந்தது. தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதிக் கடிதத்துடன் பட வெளியீட்டுத் தேதியை அக்டோபர் 18ம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

ஜோதிகா இதுவரை நடித்த படங்களிலேயே அவருடைய சிறந்த படம் என பெயர் வாங்கிய ‘மொழி’ படத்திற்குப் பிறகு ராதாமோகன், ஜோதி ‘காற்றின் மொழி’ படத்தின் மூலம் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.

விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு, டீசர் வெளியீடு ஆகியவை நடக்க உள்ளன.

Read Previous

‘வட சென்னை’ டீசர், தொடர்ந்து டிரென்டிங்கில் நம்பர் 1

Read Next

சவாலை ஏற்ற ஸ்ரீ ரெட்டி, ராகவா லாரன்ஸ் பதில் என்ன ?

Most Popular