உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், ராதாரவி, இயக்குனர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்பிரமணியம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘வட சென்னை’.
இப்படத்தின் டீசர் கடந்த சனிக்கிழமை மாலை யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்திற்குள் 30 லட்சம் பார்வைகளைக் கடந்த டீசர், தற்போது 43 லட்சங்களைக் கடந்து யு டியூப் டிரென்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
‘பொல்லாதவன், ஆடுகளம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ், வெற்றிமாறன் வட்டணியில் உருவாகியுள்ள ‘வட சென்னை’ படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை, டீசருக்குக் கிடைத்த வரவேற்பை வைத்தே புரிந்து கொள்ளலாம்.
இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்க உள்ளார்கள்.