சவாலை ஏற்ற ஸ்ரீ ரெட்டி, ராகவா லாரன்ஸ் பதில் என்ன ?

தெலுங்குத் திரையுலகத்தில் ஏற்படுத்திய பரபரப்பைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி, ராகவா லாரன்ஸ் சவாலை ஏற்பதாக அறிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் .சி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது ஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.

அவற்றிற்கு ராகவா லாரன்ஸ் மட்டும் நேற்று முன்தினம் பதிலளித்திருந்தார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இருவரும் சந்திக்கலாம் என்றும், அதில் தான் சொல்லும் வசனத்தையும், நடனத்தையும் செய்து நடித்துக் காட்டினால் உடனே தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.

அந்த சவாலை ஏற்றுக் கொள்வதாக ஸ்ரீ ரெட்டி அவருடைய முகப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார். சற்று முன்பு ராகவா லாரன்சுக்காக என ஒரு நடன அசைவு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் விடுத்த சவாலை ஸ்ரீ ரெட்டி ஏற்றுக் கொண்டுள்ளதால் அதற்கு ராகவா லாரன்ஸ் என்ன பதில் அளிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

Read Previous

‘காற்றின் மொழி’ – அக்டோபர் 18 வெளியீடு

Read Next

ராதா மோகன் இயக்கத்தில் ‘60 வயது மாநிறம்’