ராதா மோகன் இயக்கத்தில் ‘60 வயது மாநிறம்’

வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘60 வயது மாநிறம்’.

“அழகிய தீயே, மொழி, அபியும் நானும்” உள்ளிட்ட சிறந்த படங்களைக் கொடுத்த ராதா மோகன் இயக்கியிருக்கும் படம் இது.

ராதா மோகன் தற்போது ஜோதிகா நடிக்கம் ‘காற்றின் மொழி’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.

அதே சமயம் ‘60 வயது மாநிறம்’ படத்தையும் எப்போது இயக்கி முடித்தார் என்பது ரகசியமாகவே இருந்தது. நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

இளையராஜா இசையமைப்பில் ராதா மோகன் இயக்கும் முதல் படம் இது.

படத்தையும் ஆகஸ்ட் மாதமே வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Read Previous

சவாலை ஏற்ற ஸ்ரீ ரெட்டி, ராகவா லாரன்ஸ் பதில் என்ன ?

Read Next

‘பிக் பாஸ்’ அநாகரிகம், விலகுவாரா கமல்ஹாசன் ?

Most Popular