அஜித்துக்கே தெரியாத கிளைமாக்ஸ்…

ajith trisha in thala 55அஜித்தின் ‘தல 55’ படத்தைப் பற்றித்தான் இன்றைய ‘ஹாட் டாபிக்’ ஆக இருக்கும். பிரபல வார இதழ் ஒன்றில் அந்தப் புதிய படத்தைப் பற்றி இயக்குனர் கௌதம் மேனன் சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் படத்தைப் பற்றியும், அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் ஆகியோரின் கதாபாத்திரங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். “படம் நிச்சயமாக அஜித்தின் வழக்கமான படம் போல் இல்லாமல் இருக்கும். அவரை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டியிருக்கிறோம். இந்தப் படத்திற்காக நான் சொல்லாமலே பல விஷயங்களை அஜித் செய்து கொண்டு வந்து காமிரா முன் நின்றார்.

படத்தின் இடைவேளை வரையிலான கதை, அதன் பின் ஒரு அரை மணி நேரக் கதையை மட்டுமே அஜித் கேட்டுவிட்டு படத்தில் நடிக்க சம்மதித்தார். அவருக்கு இன்னும் படத்தின் கிளைமாக்ஸ் என்ன என்பதைக் கூட நான் சொல்லவில்லை. இன்னும் கூட நீங்க என் கிட்ட கிளைமாக்சை சொல்லலை, அவ்வளவு ரகசியமா வச்சிருக்கீங்க எனக் கூட அஜித் கேட்டார். இனிமேல்தான், அவருக்கும் படத்தின் கிளைமாக்ஸ் என்ன என்பதைச் சொல்ல வேண்டும், ” என்று கௌதம் மேனன் கூறியிருக்கிறார்.

ஒரு இடைவேளைக்குப் பிறகு கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் – தாமரை கூட்டணி இந்தப் படத்தில் இடம் பெறுகிறது. அனைத்துப் பாடல்களையும், இனிமையான பாடல்களாக உருவாக்கியிருக்கிறார்களாம்.

கௌதம் மேனன் – அஜித் கூட்டணி கண்டிப்பாக ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கப் போகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

Read Previous

யு டியூப்-ல் ‘ஜிகர்தண்டா’ நீக்கப்பட்ட காட்சிகள்…

Read Next

இன்றைய ரிலீஸ் – 8 படங்கள்…