‘பீட்சா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன் மற்றும் பலர் நடித்த ‘ஜிகர்தண்டா’ படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தின் நீளம் கருதி படமாக்கப்பட்ட சில காட்சிகளை நீக்கியிருந்தனர். தற்போது அந்த காட்சிகளை யு டியூப் வீடியோ இணைய தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றனர். படத்தின் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ், இது குறித்து அவருடைய டிவிட்டரில் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
நேற்று முதல், நீக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நேற்று வெளியான ‘நீக்கப்பட்ட காட்சிகள் – 1’ல் பாபி சிம்ஹாவுக்கும், சித்தார்த்துக்கும் இடையே நடக்கும் வாக்குவாதக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிப்பதற்கு கொஞ்சமாவது அழகாக இருக்க வேண்டும் என சித்தார்த், பாபி சிம்ஹாவிடம் சண்டையிடும் 2 நிமிடக் காட்சியை தற்போது வெளியிட்டுள்ளார்கள்.
அதற்குள்ளாகவே அந்த வீடியோவை 25,000க்கும் மேற்பட்டோர் பார்த்துவிட்டனர். தொடர்ந்து இது போல் மேலும் சில காட்சிகளை வெளியிட உள்ளார்களாம். இந்த ஆண்டில் இதுவரையில் வெவிந்த படங்களில் ‘ஜிகர்தண்டா’ படம் ரசிகர்களாலும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வரும் ஒரு படமாக அமைந்து வருகிறது.
‘நீக்கப்பட்ட காட்சி – 1 ’ – வீடியோ….