தீபாவளிக்கு இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ள நிலையில் அன்றைய தினம் வெளியாகும் இரண்டு படங்களுக்கு இடையே மட்டும்தான் போட்டி. விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு அவருடைய ரசிகர்கள் இப்போதே ஆரவாரத்தை ஆரம்பித்து விட்டனர்.
‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு சரியான ஆக்ஷன் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியிடமிருந்து விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுவரை வெளிவந்த விஜய் படங்களை விட இந்தப் படம் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழும் படத்திற்கு கிடைத்துள்ளதால் படக் குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனராம்.
நாம் விசாரித்த வரையில் ‘கத்தி’ படத்தின் நீளம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக் கூடியதாக இருக்குமென தெரிவிக்கிறார்கள். பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் என்றால் மூன்று மணி நேர படமாக இருந்தால் கூட ரசிகர்கள் பார்க்கத் தயாராக இருப்பார்கள்.
‘கத்தி’யின் நீளம், விஜய் ரசிகர்களுக்கு தனிப்பட்ட கொண்டாட்டத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.