போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ அடுத்த வாரம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் வியாபாரம் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன. படத்தின் தமிழ்நாடு உரிமையை யார் வாங்கி வெளியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
சற்று முன்னர், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், படத்தின் வினியோகஸ்தர்கள் யார் என்பதை அறிவித்துள்ளார்.
எஸ் பிக்சர்ஸ் சீனிவாசன், கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர் ராஜமன்னார் மற்றும் ராகுல் என்பவர் ஆகியோர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறார்கள்.