“It’s too early to say… என்று சொன்னால் என்ன அர்த்தம். இருக்கு, ஆனா, இல்ல…என்னுதானே சொல்ல முடியும்..த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் திருமணத்தை நடத்தி வைக்காமல் நமது சகோதரர்கள் ஓய மாட்டார்கள் போலத் தெரிகிறது. கடந்த வாரம் பரபரப்பாக கிளம்பிய செய்தி அதன் பின் த்ரிஷாவின் மறுப்பால் கொஞ்சம் அடங்கின் போனது.
நேற்று, ஒரு வாரப் பத்திரிகையிலும், இன்று ஒரு ஆங்கில நாளிதழிலும் வெளிவந்த செய்திகள், பேட்டிகளைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
“நிச்சயதார்த்தம் நடந்திருந்தால் நான் ஏன் அதை மறக்கணும்…அது ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம், அதை எந்த பெண்ணும் றைக்க மாட்டாள். எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவேயில்லை. அதை மறைக்க வேண்டிய அவசியமில்லை.
எனக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு, என்னோட தயாரிப்பாளர்கள், என் கூட வேலை பார்க்கிறவங்ககிட்டலாம் நான் அதைப் பத்தி தெரிவிக்கணும். அதை விட முக்கிய விஷயம், நான் அதை அப்படி ரகசியமா நடத்த வேண்டிய அவசியமே இல்லை.
ஒரு நண்பர் கூட ஃபோட்டோக்கு ‘போஸ்’ கொடுத்தால் உடனே நிச்சயதார்த்தம் நடந்துடுச்சின்னு சொல்றதா. எனக்கு வருணைத் தெரியும், அவர் என்னுடைய நல்ல நண்பர். ஆனால், அவ்வளவு சீக்கிரத்துல எதையும் இப்ப சொல்ல முடியாது,” என த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.
இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது, என்பதை உங்களது யோசனைக்கே விட்டுவிடுகிறோம்.