வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கோமாளி.
இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலரின் கடைசியில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்பதை 1996லும் சொன்னார், 2016லும் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்ற அர்த்தத்தில் ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது.
படத்தின் கதாநாயகன் ஜெயம் ரவி, 16 வருடங்கள் கோமாவில் இருந்து மீள்கிறார். இது என்ன வருடம் எனக் கேட்கிறார். பக்கத்தில் இருக்கும் அவரது நண்பர் யோகி பாபு, இது 2016ம் வருடம். நம்பலையா இப்போது பார் எனச் சொல்லி டிவியைப் போடுகிறார். அதில் ரஜினிகாந்த், நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என மேடையில் பேசுவது செய்தியாக வருகிறது.
ரஜினிகாந்த் பேசியதாக டிவியில் காட்டப்படும் அந்த வீடியோ 2017ல் ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களைச் சந்திக்கும் போது பேசிய வீடியோ. 2017ல் பேசியதை நகைச்சுவைக்காக ‘கோமாளி’ படத்தில் 2016ல் பேசியது போல காட்டியிருக்கிறார்கள்.
கோமாளி டிரைலர் நேற்று வெளியானதிலிருந்தே அந்த ரஜினிகாந்த் வீடியோ காட்சிதான் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ‘கோமாளி’ டிரைலரில் இடம் பெற்றுள்ள ரஜினிகாந்த் பற்றிய காட்சி தன்னை வருத்தப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் அவருடைய டிவிட்டர் பதிவில்,
“நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி ட்ரைலர் பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நட்பின் வெளிப்பாடா, நியாயத்தின் குரலா,” என பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் எதிர்ப்பு, மற்றும் ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பு ஆகியவற்றை அடுத்து டிரைலரில் அந்தக் காட்சி நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோமாளி டிரைலர்…