2014ம் வருடத்தின் முடிவில்…தமிழ் சினிமா… – வெங்கட் சுபா

2014-tamil-cinema-round-up

2014ம் ஆண்டில் வெளிவந்துள்ள படங்களைப் பற்றி திரையுலகில் பல வருட அனுபவம் உள்ளவரும், ஊடக ஆலோசகருமான வெங்கட் சுபா, அவருடைய ஃபேஸ் புக் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது,

“2014 வருடத்தின் முடிவில் … தமிழ் சினிமாவின் வேதனைகளையும் சில சாதனைகளையும் பதிவு செய்துவிட்டு 2015ம் ஆண்டை வரவேற்போம்.

இந்த ஆண்டு 206 நேரடி திரைப் படங்கள் திரைக்கு வந்தன. இன்னமும் 100 படங்கள் தயார் நிலையிலும் தணிக்கை செய்யப்பட்டும் வெளியே வர வழி இன்றி (முன்பாவது உறங்க ஒரு பெட்டி உண்டு இப்போது அதுவும் இல்லை )கணினிகளில் இடுங்கி கிடக்கின்றது…..

வெற்றி பெற்ற படங்கள் மற்றும் லாபமோ நஷ்டமோ … குறைந்த பட்சம் பணம் போட்டவர்க்கு .. படத்தை இயக்கியவர்க்கு……உழைத்தவர்க்கு…..அல்லது படம் பார்த்தவர்களில் பலருக்கு இப்படி ஏதாவது ஒரு தரப்பினருக்கு மட்டுமாவது மன திருப்தி அளித்த படங்கள் என பட்டியலிட்டால் சுமார் 65 படங்களை சொல்லலாம்.

இந்த 65 படங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்..

” பட்டியலிடும் முன் ஒரு வார்த்தை இது என் கருத்து. நீங்களும் இதில் சில படங்களை சேர்க்கலாம் .. சில படங்களை நிரகரிக்கலாம் . இதை முழுமையாக புறம் தள்ளி வேறு வேலை பார்க்கலாம் ”
இதோ 2014 ல் குறிப்பிடத்தகுந்த தமிழ் திரைப்படங்கள் ( கப்பல் கயல் வெள்ளக்கார துரை மீகாமன் ஆகிய படங்கள் இதில் சேர்க்கப் படவில்லை … வருடக் கடைசியில் அதற்கான பட்டியலில் சேர்க்க வேண்டும்)

முதல் பிரிவு ” எல்லோருக்கும் லாபம் .. மகிழ்ச்சி .. புகழ் .. என அனைத்தும் அடைந்த திரைப்படங்கள் வரிசை.

கோலி சோடா …..
தெகிடி …..
மான் கராத்தே ….
என்னமோ நடக்குது ….
யாமிருக்க பயமே …
மஞ்சப்பை …
முண்டாசுப்பட்டி …
சதுரங்க வேட்டை …
வேலை இல்லா பட்டதாரி ….
கதை திரைக்கதை வசனம் இயக்கம்..
சலீம்…..
அரண்மனை ….
நாய்கள் ஜாக்கிரதை …
பிசாசு …

இந்த 14 படங்களும் பூரண வெற்றி பெற்ற திரைப்படங்கள் . அதாவது தயாரிப்பாளர்கள் .. இயக்குனர்கள் .. நடிகர்கள் .. வினியோகஸ்தர்கள்.. திரை அரங்கு உரிமையாளர்கள் .. தொலைக்காட்சி உரிமம் பெற்றவர்கள் .. ரசிகர்கள் .. ஊடக நண்பர்கள் என அனவருக்கும் மகிழ்ச்சி தந்த திரைப் படங்கள்.

அடுத்த வரிசை ….பரபரப்பு … வசூல் .. வெற்றி போல தோற்றம் .. அதிக அளவில் பணம் விளையாடிய நிலைமை .. முற்றிலும் ஒதுக்க முடியாத ஆனால் சிலருக்கு லாபத்தையும் சிலருக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்திய படங்கள் .. சிலருக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்த சிலருக்கு மோசமான அனுபவத்தை தந்த திரைப்படங்கள்

ஜில்லா
வீரம்
நிமிர்ந்து நில்
நான் சிகப்பு மனிதன்
ஆஹா கல்யாணம்
தெனாலி ராமன்
ஜிகர்தண்டா
அரிமா நம்பி
சிகரம் தொடு
தெனாலி ராமன்
கோச்சடையான்
அஞ்சான்
மதறாஸ்
காவிய தலைவன்
கத்தி
பூஜை
லிங்கா
இது கதிர்வேலனின் காதல்
( 18 படங்கள்)

அடுத்த வரிசை … வித்தியாசமானது..இந்த வரிசையில் உள்ள படங்கள் நஷ்டப் பட்ட படங்கள்தான் … ஆனால் இவற்றை மோசமான படங்கள் என ஒதுக்கி விட முடியாது … வெற்றியை நோக்கிய பயணத்தில் செய்த சில பல தவறுகளால் லாபம் புகழ் வெற்றி என மூன்றும் அல்லது ஏதேனும் ஒன்றை இழந்தவர்கள்

நம்ம கிராமம்
ரம்மி
பண்ணையாரும் பத்மினியும்
குக்கூ
நெடுஞ்சாலை
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
வாயை மூடி பேசவும்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
பூவரசம் பீப்பீ
உன் சமையல் அறையில்
சைவம்
ராமானுஜன்
மேகா
அமர காவியம்
பட்டய கிளப்பணும் பாண்டியா
பர்மா
வானவராயன் வல்லவராயன்
ஆடாம ஜெயிச்சோமடா
ஜீவா
வெண்ணிலா வீடு
ஜெய் ஹிந்த் 2
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
அப்புச்சி கிராமம்
திருடன் போலீஸ்
காடு


( 27 படங்கள்)

ஆக இந்த 59 படங்களைத் தவிர மற்ற 142 திரைப் படங்கள் எங்கள் தொழிலாளர்களை … நடிகர்களை .. இயக்குனர்களை .. சக கலைஞர்களை .. விளம்பரங்கள் மூலம் பத்திரிகைகளை .. தொலிக்காட்சி வானொலி முதலாளிகளை வாழ வைத்த தெய்வங்கள் …

இப்படித்தான் இருக்கிறது திரைத் துறை.. நிச்சயம் கிடையாது வரைமுறை. நல்ல காலம் வரும் வரை .. காத்திருப்பது மட்டும்தான் ஒரே வழிமுறை… happy new year…” என பதிவிட்டுள்ளார்.

நன்றி – வெங்கட் சுபா, ஊடக ஆலோசகர்…

Read Previous

வெள்ளக்கார துரை – விமர்சனம்

Read Next

மீகாமன் – விமர்சனம்

Most Popular