விரைவில் திரைக்கு வரும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’

ஆரா சினிமாஸ் தயாரிப்பில் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் வீரா, மாளவிகா நாயர் நாயகன், நாயகியாக நடிக்க பசுபதி, ரோபோ ஷங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், சேத்தன், ஷா ரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’.

பல விளம்பரப் படங்களைத் தயாரித்து இயக்கிய அவினாஷ் ஹரிஹரன் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

‘குக்கூ’ படத்தில் நாயகியாக அறிமுகமான மாளவிகா நாயர் அதற்குப் பிறகு பல கதைகளைக் கேட்டு நிராகரித்தவர், இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதித்தாராம்.

மேட்லி ப்ளூஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், பிரவீன் ஆன்டனி படத்தொகுப்பில், டான் அசோக் வசனத்தில், எட்வர்ட் கலைமணி கலை வண்ணத்தில் உருவாகும் இப்படத்திற்கு விக்னேஷ் சிவன், விவேக், முத்தமிழ் ஆகியோரின் பாடல்கள் இயற்ற, திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சி அளிக்க, தஸ்தா நடனம் அமைக்கிறார்.

இப்படம் பற்றி தயாரிப்பாளர் காவ்யா வேணுகோபால் கூறுகையில்,

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ ரசிகர்களை கட்டிப் போட்டு கவர்ந்திழுக்கும் படமாக இருக்கும். மிகச் சிறந்த நடிக நடிகையர், திறமையான தொழில் நுட்பக் கலைஞர்கள் என்கிற கலவையுடன் வெளி வர இருக்கும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளிவர உள்ளது.

படத்தின் தரத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சத்தியமூர்த்தி இந்தப் படத்தின் திரைஅரங்கு விநியோக உரிமையை உடனே பெற்று உள்ளார். அவருக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். இந்த மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்,” என்கிறார்.

Read Previous

ஆதி நடிக்க தமிழில் ரீமேக் ஆகும் ‘ஆர்எக்ஸ் 100’

Read Next

87 வயதிலும் சாருஹாசன் தந்த அதிரடி நடிப்பு