AVR புரொடக்ஷன்ஸ் சார்பில் V.R. அன்புவேல் ராஜன் பெருமையுடன் தயாரிக்கும் படம் ‘வீர தீர சூரன்’.
விஷ்ணு விஷால் நாயகனாகவும், கேத்தரின் தெரஸா நாயகியாகவும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார்.
இயக்குனர் சுசீந்திரனின் எண்ணத்தில் உருவான கதை இது. திரைக்கதை, வசனம் அமைத்து ஷங்கர் தயாள் .N இயக்குகிறார். தேசிய விருதுபெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில், ஒளிப்பதிவாளர் திவாகர் ஒளிப்பதிவில், ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இசையமைப்பாளர் வேத் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
“ என்னுடைய பல்வேறு தொழில் அலுவல்களுக்கு மத்தியில் நான் ஒரு சினிமா ஆர்வலனாகவே இருந்துள்ளேன். படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் திண்ணமாய் இருந்த சமயத்தில் யதேச்சையாக சுசீந்திரனிடமிருந்த இந்தக் கதையைக் கேட்டேன். சொல்வதற்கு வார்த்தையில்லாமல் அசந்துபோனேன், மற்றவை சொல்லி வைத்தாற்போல் நிகழ ‘வீர தீர சூரன்’ படத்தை நானே தயாரிக்கிறேன். விஷ்ணு விஷால் இக்கதைக்கு நாயகனாக கச்சிதமாய் அமைந்துள்ளார். மே மாத மத்தியில் முதல் கட்ட படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகவுள்ளது,” எனக் கூறுகிறார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன்.