‘‘குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம்” ஆகிய படங்களுக்குப் பிறகு விஷ்ணுவர்தன் தற்போது இயக்கி வரும் படம் ‘யட்சன்’.
இப்படத்தில் ஆர்யா, கிருஷ்ணா, ஸ்வாதி, தீபா சன்னிதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குனர் விஷ்ணுவர்தன் – ஆர்யா கூட்டணி இணையும் ஐந்தாவது படம் இது.
படம் பற்றி இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியதாவது,
”இது இரண்டு புறம் போக்குகளின் கதை. அவர்களுக்கிடையே உள்ள நட்பைப் பேசும். நட்பு மட்டுமல்ல படத்தில் ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி என பல அம்சங்களும் இருக்கும்.
”ஆர்யாவை வைத்துப் படம் ஆரம்பிக்கும் போது உள்ள புத்துணர்வு முடிக்கும் போதும் இருக்கும். முடித்தவுடன் அப்பாடா, முடிந்ததா என்று தோன்றாது, அந்தளவுக்கு புத்துணர்ச்சியை உணர வைப்பது அவரது ஸ்பெஷல். அடுத்த படம் எப்போது என்று அவரே கேட்பார். அந்தளவுக்கு எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. முதன் முதலில் என் தம்பி கிருஷ்ணாவை, வைத்து இயக்கியதும் மறக்க முடியாத மகிழ்ச்சி,”என்கிறார் விஷ்ணுவர்தன்.
விஷ்ணுவர்தனின் அனைத்துப் படங்களுக்குமே யுவன் சங்கர்ராஜாதான் இசை. பள்ளியிலிருந்தே ஒன்றாகப் படித்து வளர்ந்தவர்கள் அவர்கள். அந்த அளவிற்கு இருவருக்குள்ளும் நட்பு உண்டு. இப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்த வருகிறது.
இப்படத்தை விஷ்ணுவர்தன் பிக்சர்ஸுடன், யுடிவியும் இணைந்து தயாரிக்கிறது.