ஜீவா, அருள்நிதி நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களையும், பல இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகளையும் அறிமுகப்படுத்திய ஆர்.பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 90 வது படம் ‘களத்தில் சந்திப்போம்’.

ஜீவா – அருள்நிதி இணைந்து நடிக்க என். ராஜசேகர் இயக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

1990 ஆம் ஆண்டு புது வசந்தம் படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் கால் பதித்தது ஆர் .பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் .

தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், ஹிந்தி மொழிகளில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.

ஜீவா , அருள்நிதி இருவரும்முதன் முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் நடிக்க, காரைக்குடி செட்டியாராக ‘அப்பச்சி’ என்ற வித்தியாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார்.

இவர்களுடன் ரோபோசங்கர், பால சரவணன் நகைச்சுவை வேடங்களிலும் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து , வேலராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ‘பிசாசு’ பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது.

Read Previous

யாரோ – தனிமை நாயகனின் திரில்லர் கதை

Read Next

மெரினா புரட்சி, உனக்கேன் வேண்டாத வேலை என்றார்கள்….