தெலுங்கில் 20 கோடி வசூலித்த ‘காஞ்சனா 2’…

ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் கடந்த மாதம் 17ம் தேதி வெளிவந்த படம் ‘காஞ்சனா 2’.

தமிழில் மாபெரும் வெற்றி பெற்று சுமார் 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்த இந்தப் படம் தெலுங்கிலும் புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது.

‘கங்கா’ என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த 1ம் தேதியன்று ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இப்படம் வெளியானது. கடந்த 20 நாட்களாக அமோக வரவேற்புடன் ஓடி வரும் இந்தப் படம் இதுவரை 20 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளதாம்.

சமீப காலத்தில் ஒரு டப்பிங் படம் இந்த அளவிற்கு வசூல் செய்த்து இதுவே முதல் முறை என்கிறார்கள்.

“லிங்கா, உத்தம வில்லன், ஓ காதல் கண்மணி” ஆகிய பெரிய படங்கள் தெலுங்கில் அதிகமாக வசூல் செய்ய முடியாமல் தவிக்கும் போது ‘காஞ்சனா 2’ படம் இந்த அளவிற்கு வசூல் செய்துள்ளது மிகப் பெரிய விஷயம் என தெலுங்குத் திரையுலக வட்டாரத்தில் ஆச்சரிப்படுகிறார்கள்.

Read Previous

‘ஜிகர்தண்டா’ ரீமேக், கார்த்திக் சுப்புராஜ் புகார்

Read Next

மலையாளப் பக்கம் சென்ற பரத்…

Most Popular