மலையாளப் பக்கம் சென்ற பரத்…

‘பாய்ஸ்’ படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக அறிமுகமானாலும், அந்த ஐந்து பேரில் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்து வந்த ஒரே ஹீரோவாக இருந்தவர் பரத் மட்டுமே.

‘காதல்’ படம் வந்து ஹிட் ஆன பிறகு பரத் தமிழில் ஓரளவிற்கு வெற்றிகரமான நாயகனாக வலம் வந்தார். தொடர்ந்து சில வெற்றிப் படங்களில் நடித்தார். இருந்தாலும் அவரால் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

தமிழில் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த ‘555, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ ஆகிய படங்கள் வெற்றி பெறாமல் போனதால் அவருக்குத் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இப்போது மலையாளத்தில் ‘லார்டு லிவிங்ஸ்டன் 7000 கான்டி’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. இளம் இயக்குனரான அனில் ராதாகிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் படம் காடு அழிப்புக்கு எதிரான படமாக உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தில் தமிழ் பேசும் ஒரு கதாபாத்திரத்தில்தான் பரத் நடிக்கப் போகிறாராம்.

தமிழிலும் சில படங்களில் நடிக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம் பரத்.

Read Previous

தெலுங்கில் 20 கோடி வசூலித்த ‘காஞ்சனா 2’…

Read Next

சிபிராஜ் நடிக்கும் ‘ஜாக்சன் துரை’ ஆரம்பம்…

Most Popular