‘அம்மணி’ படத்தில் 82 வயது நாயகி…

‘ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே’ படங்களுக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் படம் ‘அம்மணி’. டேக் என்டர்டெயின்மென்ட் சார்பில் வெண் கோவிந்தா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில், அதாவது ஹீரோயினாக நடிக்கும் சுப்பு லட்சுமி பாட்டிக்கு வயது 82. அதிக வயதுடைய ஒருவர் ஒரு படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதன் முறையாக இருக்கும்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் நடித்தவர்தான் சுப்பு லட்சுமி பாட்டி. படப்பிடிப்பில் அவரை யாராவது பாட்டி என்று அழைத்தால் பிடிக்காதாம். அக்கா என்றுதான் அழைக்கச் சொல்வாராம்.

ஒரு நிஜமான வாழ்க்கைக் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஒரு நல்ல படத்தைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என படத்தின் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Read Previous

‘அமரன் 2’ – ஆச்சரியப்படுத்தும் கார்த்திக்

Read Next

சிம்பு, மிகப் பெரும் திறமைசாலி – கௌதம் மேனன்

Most Popular