சிம்பு, மிகப் பெரும் திறமைசாலி – கௌதம் மேனன்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மீண்டும் நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை நெடுஞ்சாலைகளில் நடத்தி வருகிறார்கள். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் முதலில் சிம்பு, நாயகி மஞ்சிமா நடிக்கத் தெலுங்கிலும், பின்னர் தெலுங்கில் நாக சைதன்யா, மஞ்சிமா நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன.

சிம்புவைப் பற்றி கௌதம் மேனன் மனம் திறந்து பாராட்டியுள்ளார். “அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ஒவ்வொரு நிமிடப் படப்பிடிப்பையும் ஜாலியாகவும், அன்பாகவும் மிகத் திறமைசாலியான சிம்புவுடன் நடத்தி வருகிறேன்,” எனப் பாராட்டியுள்ளார்.

Read Previous

‘அம்மணி’ படத்தில் 82 வயது நாயகி…

Read Next

‘இன்று நேற்று நாளை’ – ஜுன் 12ல் இசை வெளியீடு