வடிவேலு நாயகனாக நடித்து வெளிவந்துள்ள ‘எலி’ படம் பற்றி இதுவரை வெளிவந்துள்ள விமர்சனங்கள் அனைத்துமே படத்தில் உள்ள குறைகளை வெகுவாகவே சுட்டிக் காட்டியுள்ளன.
ஆனால், அவற்றை விமர்சனங்களாக எடுத்துக் கொள்ளாமல் அப்படி விமர்சித்தவர்களை ‘சைக்கோ, சேடிஸ்ட்’ எனக் கூறியிருக்கிறார் வடிவேலு.
அவர் அளித்துள்ள வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது, “சில பேரு இந்தப் படத்தைப் பத்தி தப்புத் தப்பா எழுதறாங்க. அது என்னன்னு தெரியலை. படம் பார்த்துட்டு உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லைன்னா, யார் கிட்டயாவது, என்னப்பா சிரிக்கிறாங்களேன்னு கேட்டு எழுதுங்க.
நகைச்சுவை உணர்வு இல்லாதவங்க கூட இந்தப் படத்தைப் பார்த்து சிரிக்கிறாங்க. இந்தப் படத்தைக் கெடுக்கிறதுக்குன்னு சில விஷயம் நடக்குது.
நிறைய பேரு சைக்கோவா, சேடிஸ்ட்டான்னு தெரியலை. ‘எலி’யைப் பத்தி இணையதளங்கள்ல தப்பா எழுதறாங்க,” எனச் சொல்லியிருக்கிறார்.
‘எலி’ படத்தின் விமர்சனத்தை சில பத்திரிகைகளும், சிறந்த பத்திரிகைகளும் பாராட்டுவதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால், அப்படி எந்த பத்திரிகையுமே இந்தப் படத்தைப் பாராட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதளங்களில் மட்டுமே திட்டுவதைப் போல வடிவேலு கூறியிருக்கிறார். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவருக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது.
வடிவேலுவின் வீடியோ செய்தி…
https://youtu.be/LPmIKN98_OE