‘பாயும் புலி’ ரிலீஸ் விவகாரம் – விஷால் கேள்வி

‘பாயும் புலி’ படத்தை வெளியிட செங்கல்பட்டு ஏரியா திரையரங்க உரிமையாளரான ரோகினி பன்னீர் செல்வம் தடை விதித்துள்ளார்.

அதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் ‘பாயும் புலி’ படத்தையும் மற்ற தமிழ்ப் படங்களையும் 4ம் தேதி முதல் வெளியிட மாட்டோம் என இன்று மாலை அறிவித்தனர்.

இதையடுத்து தற்போது ‘பாயும் புலி’ படம் நாளை மறுநாள் வெளியாகுமா என்பது குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனுடைய சற்று முன் டிவிட்டரில் இது பற்றி கருத்து தெரிவித்திருந்த விஷால், கடைசி நேரத்தில் படத்தை வெளியிடாமல் செய்வது முறையற்றது என்று கூறியுள்ளார்.

“ஒரு மாதத்திற்கு முன்பாகவே பிரச்சனையைத் தீர்ப்பதை விட்டுவிட்டு, கடைசி நாளில் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சில தியேட்டர்களுக்காகவும் ஒரு வினியோகஸ்தருக்காகவும் பட வெளியீட்டை ஏன் தடுக்க வேண்டும், என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Read Previous

Namitha is back

Read Next

Namitha lost weight, ready for comeback