24ம் தேதி வருகிறார்…‘வாலிப ராஜா’…

வான்க்ஸ் விஷன்ஸ் தயாரிப்பில் சாய் கோகுல் ராம்நாத் இயக்கியுள்ள படம் ‘வாலிப ராஜா’.

இப்படத்தில் சேது, சந்தானம், விடிவி கணேஷ், விஷாகா, பவர் ஸ்டார், தேவதர்ஷினி, சித்ரா லெட்சுமணன், சுப்பு பஞ்சு, ஜெயப்பிரகாஷ், நான்கடவுள் ராஜேந்திரன் மற்றும் மும்பை அழகி நுஷ்ரத் நடித்துள்ளனர்.

இயக்குனர் சாய் கோகுல் ராம்நாத் இயக்குனர் கேவி ஆனந்திடம் சினிமா கற்றவர். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படம். அதே நட்சத்திரக் கூட்டணியை வைத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் போல முழுநீள நகைச்சுவைப்படமாக உருவாகியுள்ளது ‘வாலிபராஜா’ .

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

”இதுவரை சினிமாவில் எத்தனையோ குடும்பங்களைப் பார்த்திருப்பார்கள். ஆனால் இப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர் வித்தியாசமாக இருப்பார்கள். அவர்களது ஒவ்வொரு செயலும் பேச்சும் சிரிக்க வைக்கும். அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும்படியான படமாக இந்தப் படம் இருக்கும்,” என்கிறார் இயக்குனர்.

சந்தானம் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் வாலிப ராஜா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய தோற்றம் ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலனைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாம். ஒரு வித்தியாசமான குடும்பத்தின் பிரச்சினையை சந்தானம் எப்படித் தீர்க்கிறார் என்பது படத்தில் மிகவும் கலகலப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்தியாவின் முதல் சைக்கோ காமெடிப் படம் இது என்கிறார் இயக்குனர்.

செப்டம்பர் 24ம் தேதி இப்படம் வெளியாகிறது.

Read Previous

Mellisai – Official First Look Teaser

Read Next

Trisha Illana Nayanthara – Bittu Padam Di – Song Video