‘பர்மா’ படத்தை இயக்கிய தரணிதரன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘ஜாக்சன் துரை’.
இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தை இயக்குனர் தரணிதரன் திட்டமிட்டபடி 35 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார். படம் நன்றாக வந்துள்ளதால் தயாரிப்பாளர் M.S.சரவணன் மற்றும் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்களாம்.
பர்மா மற்றும் ஜாக்சன் துரை ஆகிய இரண்டு படங்களையும் இயக்குனர் 35 நாட்களில் முடித்துள்ளதால் தயாரிப்பாளரின் இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ளார். படத்திற்கான போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் இப்போது மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
தயாரிப்பில் இருக்கும் போதே ‘ஜாக்சன் துரை’ படம் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தியேட்டர் வினியோக உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. இந்நிறுவனம் வெளியிடும் அனைத்துப் பேய் படங்களும் மாபெரும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் ‘ஜாக்சன் துரை’ படம் வெளியாக உள்ளது.