‘நானும் ரௌடிதான்’ படம் மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
விஜய் சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும், பார்த்திபன் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள்.
ஆனால், பார்த்திபனிடம் நீங்கள் இந்தப் படத்தில் வில்லனா என்று கேட்டால், இல்லை நான் நடிகன் என அவருக்கே உரிய குசும்புடன் பேசினார்.
“கிள்ளினால் எப்படி ‘நறுக்’குனு இருக்குமோ அப்படி இருக்கும் என்னுடைய கிள்ளி வளவன் கேரக்டர்.
எப்பவுமே ஒரு படத்துக்கு டப்பிங் பேசும் போது ஒரு 25 சதவீதம் அதிகமாக்குவோம். ஒண்ணுமே இல்லாம பேசறதுக்கும், இருக்கிற விஷயத்தை உப்பு, புளி, மிளகாலாம் போட்டு சூடேத்தலாம்.
கதை கேட்கற நேரத்துலயே ஒரு படத்தை தீர்மானிச்சிடலாம், இது நல்லா இருக்கும், இருக்காதுன்னு. நிறைய படங்கள் அப்படித்தான், ஆனால் சில படங்கள் அந்த ரிசல்ட்டை கொடுக்காம போயிடும். நாம நினைப்போம், வராம போயிடும்.
‘மாஸ்’ படலாம் அப்படி கிடையவே கிடையாது. ‘மாஸ்’ படத்துல வெறும் ஏழு சீன்தான் நான் வந்தாலும், அதுக்குள்ள ஏதாவது பண்ணிடுவேன்கற நம்பிக்கை இருந்ததாலதான் அந்தப் படத்துல நடிச்சேன். எவ்வளவு எடிட் பண்ணாலும் நான் தப்பிச்சிடுவேன்.
இந்தப் படத்துல நிறைய தவறு வர்றதுக்கு வாய்ப்பில்லை. எந்த தவறு வந்தாலும் அவர் அதை ‘கரெக்ட்’ பண்ணிடுவாரு. அவர் நினைக்கிறது வர்ற வரைக்கும் ‘கரெக்ட்’ பண்ணிக்கிட்டேயிருப்பாரு.
இந்தப் படத்துல என்னை வில்லனான்னு கேக்கறாங்க. நடிகர் சங்கத் தேர்தல்ல ஓட்டு போட வந்த ரஜினிகாந்த் நடிகர் சங்கப் பெயரை தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்னு பேரை மாத்தணும்னு சொன்னாரு. கமல்ஹாசன், இந்திய நடிகர் சங்கம்னு மாத்தலாம்னாரு. சிம்பு வந்து உலக நடிகர் சங்கம்னு மாத்தலாம்னாரு. அது மாதிரி என்னை நாயகனாக, வில்லனான்னு கேட்டால் நான் நடிகன், அவ்வளவுதான்.
எனக்கு விஜய் சேதுபதி, நயன்தாராலாம்தான் வில்லன், வில்லி. அவங்களுக்கு நான் என்னன்னு தெரியாது. இந்தப் படத்துல நான் நடிகனாதான் நடிச்சிருக்கேன்.
காதலைப் பத்திப் பேசும் போதும், கிசுகிசு விஷயங்களைப் பத்திப் பேசும் போது சம்பந்தப்பட்டவங்க முகம் மலரும். அது நமக்குக் கிடைக்கலன்னா கூடப் பரவாயில்லை, மத்தவங்களுக்குக் கிடைக்கும் போது நினைச்சி சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.
இந்தப் படம் முழுக்க சீரியசா இருக்காது, அதுதான் விக்னேஷ் சிவனோட ஸ்பெஷல்.
தனுஷுங்கறது ஒரு ராசி மட்டுமில்ல, அவர் எந்தப் படம் எடுத்தாலும் அந்தப் படம் ஹிட்டுங்கற ராசி இருக்கு, அதுவும் இந்தப் படத்துல சேர்ந்திருக்கு.
இப்ப நாம பேசும் போது இருக்கும் சந்தோஷம், படம் ரிலீசுக்கு அப்புறமும் இருக்க என்னோட வாழ்த்துகள்,” என பார்த்திபன் பேசினார்.