தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ள ‘நானும் ரௌடிதான்’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 300 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
இன்று வெளிவந்துள்ள படங்களில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் காலை காட்சிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
ரசிகர்களின் அமோக வரவேற்பில் தியேட்டர்களில் ஆரவாரம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
நகைச்சுவை, காதல் என விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நடந்து வருவதாகத் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
சென்னை ஏரியாவில் 17 திரையரங்குகளிலும், வட ஆற்காட்டில் 22, தென்னாற்காட்டில் 13, செங்கல்பட்டில் 40, கோவையில் 27, மதுரையில் 27, சேலம் 22, திருநெல்வேலி, கன்னியாகுமரி 12, திருச்சி ஏரியாவில் 25 திரையரங்குகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது.