விக்ரமை இயக்கும் திரு

விஷால் நடித்த ‘தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய திரு, அடுத்து விக்ரம் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார்.

இந்தப் படத்தை ஜீவா நடித்த ‘சிங்கம் புலி’ படத்தைத் தயாரித்த சில்வர்லைன் நிறுவனம் தயாரிக்கிறது.

விக்ரம் தற்போது ‘அரிமாநம்பி’ ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்தப் படத்துடன் திரு இயக்கும் படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Read Previous

What’s the latest in ‘Beep Song’ matter ?

Read Next

Thiru, Vikram come together