தமிழில் வெற்றி – தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘ஈட்டி’…

குளோபல் இன்பொடெயின்ட் மீடியா மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ரவி அரசு இயக்கத்தில் அதர்வா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘ஈட்டி’.

விளையாட்டை மையமாக வைத்து கமர்ஷியலாகவும், குடும்பத்துடனும் பார்க்கும்படியாக இந்தப் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களிலேயே இப்படம் 15 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

படத்தின் வெற்றிக்காக இயக்குனர் ரவி அரசுவைப் பாராட்டிய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தற்போது தெலுங்கிலும் இப்படத்தை ரீமேக் செய்ய உள்ளார். தமிழில் படத்தை இயக்கிய ரவி அரசு மற்ற மொழிகளிலும் இயக்க உள்ளார்.

அதர்வாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடைய திறமையை முற்றிலும் வெளிப்படுத்தும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.

Read Previous

Star Wars – The Force Awakens, LA Premiere with Harrison Ford, Stormtroopers and more

Read Next

சட்டத்தை எதிர் கொள்வேன் – சிம்பு டிவீட்