‘தாரை தப்பட்டை’, பெருமையான அறிமுகம் – ஆர்.கே.சுரேஷ்

“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பரதேசி, சூது கவ்வும், தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” உள்ளிட்ட பல படங்களை வினியோகம் செய்தவரும், தற்போது விஜய் சேதுபதி, தமன்னா நடிக்கும் ‘தர்மதுரை’ படத்தைத் தயாரித்து வரும் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாமகிறார்.

பாலாவின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாவதைப் பற்றி ஆர்.கே.சுரேஷ் பெருமையாகக் கூறுகிறார்.

“தாரை தப்பட்டை’ படத்துல எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம். ‘கருப்பையா’ங்கற கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். ஊர்ல ஒரு முக்கியமான ஆளு. அதுக்கு மேல இப்ப விவரமா சொல்ல முடியாது.

வாழ்க்கையில எல்லாருமே பாலா சார் படத்துல நடிக்க எல்லாரும் வாய்ப்பு கிடைக்குமான்னு காத்துக்கிட்டிருக்காங்க. அவர் படத்துல நடிக்க எனக்கு கிடைச்ச வாய்ப்புக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்.

அவர் படத்துல நடிச்ச பிறகு இனி மத்த படங்கள்ல நடிக்கிறது ஈஸியா இருக்கும்கற அனுபவம் எனக்கு இந்தப் படத்துல கிடைச்சது,” என தன் அறிமுகம் பற்றி சிக்கனமாகவே பேசுகிறார்.

Read Previous

Bangalore Naatkal – Official First Look Teaser

Read Next

‘தாரை தப்பட்டை’, தனி சந்தோஷம் – சசிகுமார்

Most Popular