குன்னூரில் ஆரம்பமான ‘கவலை வேண்டாம்’

‘விண்ணைத் தாண்டி வருவாயா, கோ, யாமிருக்க பயமே” உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஆர்எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்டமான தயாரிப்பு ‘கவலை வேண்டாம்’ .

இப்படத்தின் பப்பிடிப்பு இன்று முதல் குன்னூரில் ஆரம்பமானது.

‘கோ, யான்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் ஜீவா, ஆர்எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் படம் இது.

பாபி சிம்ஹா இரண்டாவது கதாநாயகனாக நடிக்கிறார். ஜீவா ஜோடியாக காஜல் அகர்வால் முதன் முறையாக நடிக்கிறார். மற்றும் சுனைனா, சுருதி ராமகிருஷ்ணன், மந்த்ரா, ஆர் ஜே பாலாஜி, பால சரவணன், மயில் சாமி, மொட்ட ராஜேந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே அடுத்து இயக்கும் படம் இது.

‘கோ 2’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான லியான் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கேவி ஆனந்திடம் உதவியாளராகப் பணியாற்றிய அபிநாதன் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அறிமுககமாகிறார். ரூபன் ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, செந்தில் ராகவன் கலை இயக்குனராகப் பணியாற்றுகிறார்.

ஆர் எஸ் இன்போடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

Read Previous

Kadhalum Kadanthu Pogum – Official Teaser

Read Next

Pichaikkaran – Nenjorathil – Lyric Video

Most Popular