பயங்கர பேய் படம் ‘பொட்டு’ இன்று ஆரம்பம்…

‘மைனா, சாட்டை, மொசக்குட்டி’ போன்ற படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் பரத், இனியா, நமீதா, மனிஷா யாதவ், நாசர், ஊர்வசி, ஆசிஷ் வித்யார்த்தி, ஜெகன், சிங்கம் புலி மற்றும் பலர் நடிக்கும் ‘பொட்டு’ படத்தை இன்று ஆரம்பித்துள்ளது.

இதே நிறுவனம் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடித்துள்ள ‘சவுகார்பேட்டை’ படத்தைத் தயாரித்து முடித்துள்ளது. இப்படம் அடுத்த மாதம் 12ம் தேதி வெளிவர உள்ளது.

‘பொட்டு’ படம் பற்றி இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது,

“ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்காக நான் இயக்கியுள்ள ‘சவுகார்பேட்டை’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது. அந்தப் படத்தைப் போலவே ‘பொட்டு’ படமும் பயங்கர பேய் படம்தான். பரத்துக்கு கெட்டப் மட்டும் வித்தியாசமல்ல, கதாபாத்திரமும் வித்தியாசம்தான்.

இன்று ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து ஹைதராபாத், கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது,” என்றார்.

 

Read Previous

Bangalore Natkal audio on 23 January

Read Next

‘பிச்சைக்காரன்’ – சர்ச்சை பாடல் வரிகள் நீக்கம்