தெலுங்கில் டப்பிங் பேசும் கார்த்தி, தமன்னா

பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் கோபி சுந்தர் இசையமைப்பில் நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தோழா‘.

இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்பட்டு அடுத்த வாரம் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

தமிழில் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா சொந்தக் குரலிலும், தெலுங்கில் தமிழ் நடிகரான கார்த்தி சொந்தக் குரலிலும் டப்பிங் பேசுகின்றனர்.

ஹிந்தி நடிகையான தமன்னா, தெலுங்கில் முதல் முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறார். தமிழில் தமன்னா சொந்தக் குரலில் பேசவில்லையாம்.

ஆனால், அடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் நடித்து வெளிவர உள்ள ‘தர்மதுரை’ படத்தில் சொந்தக் குரலில் பேசப் போகிறாராம்.

‘தோழா’ படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

Kadhalum Kadanthu Pogum – Akkam Pakkam Paar – Song

Read Next

விஜய் சேதுபதியின் வசூல் வேட்டை