அரசியல் மைதானத்தில் விளையாடும் ‘புகழ்’

ரேடியன்ஸ் மீடியா வருண் மணியன் வழங்க, எ ஃபிலிம் டிபார்ட்மென்ட் புரொடக்சன் தயாரிப்பில் மணிமாறன் இயக்கத்தில் விவேக் – மெர்வின் இயக்கத்தில் ஜெய், சுரபி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘புகழ்’.

தேர்தல் பரபரப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் அரசியலைக் களமாகக் கொண்டுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறார் படத்தின் இயக்குனர் மணிமாறன்.

“இன்றைய இளைஞர்கள் சமுதாய தேவைகளை நோக்கி தங்களது ஆர்வத்தைக் காட்டுவது, நீதி அடையும் வரை இடைவிடாமல் தங்கள் குரலை எழுப்புவது போன்ற விஷயங்களுடன் ஒரு கமர்ஷியல் படமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு இளைஞரைப் பற்றிய கற்பனை கதையே ‘புகழ்’. அந்த இளைஞன் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள விளையாட்டு மைதானமே படத்தின் முக்கிய இடம். அந்த விளையாட்டு மைதானமும் அதைச் சுற்றிய அவனது வாழ்க்கையுமே இந்தப் படம்.

அரசியல் ரீதியான அச்சுறுத்தல் இளைஞர்களின் மகிழ்ச்சியை எவ்வாறு கெடுக்கிறது என்பதை ஒரு சிறந்த பொழுது போக்கு படமாக எடுத்துள்ளேன்,” என்கிறார் மணிமாறன்.

‘புகழ்’ படம் இன்னும் சில நாட்களில் மார்ச் 18ம் தேதி வெளியாகிறது.

Read Previous

Amma Kanakku on 22 April

Read Next

பாராட்டு மழையில் ‘கோடை மழை’ நாயகி ஸ்ரீபிரியங்கா