‘மொட்ட சிவா கெட்ட சிவா’ – சிங்கிள் டிராக் நாளை வெளியீடு

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் உலகம் முழுவதும் வெளியிட உள்ள படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’.

சாய் ரமணி இயக்கத்தில் அம்ரீஷ் இசையமைப்பில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம் இது.

கடந்த வருடம் வெளிவந்த ‘காஞ்சனா 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவர உள்ள படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா.

நாளை இப்படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட உள்ளார்கள்.

Read Previous

மார்ச் 20 – நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம்

Read Next

10 கோடியைக் கடந்த ‘பிச்சைக்காரன்’ வசூல்

Most Popular