விஜய் ஆண்டனி தயாரித்து நாயகனாக நடித்து மார்ச் மாதம் 4ம் தேதி வெளிவந்த படம் ‘பிச்சைக்காரன்’.
கடந்த 10 நாட்களில் இந்தப் படம் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியுள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் ஆண்டனி நடித்து இதுவரை வெளிவந்த ‘நான், சலீம்’ ஆகிய வெற்றி பெற்ற படங்களின் வசூலை விட ‘பிச்சைக்காரன்’ வசூல் அதிகம் என்கிறார்கள்.
அம்மா பாசமும், பரபரப்பான திரைக்கதையும் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளதாக வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
விஜய் ஆண்டனி அடுத்து ‘சைத்தான், எமன்’ ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.
இசையமைப்பாளராக இருந்து ஹீரோவான ஜி.வி.பிரகாஷுடன் ஒப்பிடுகையில் விஜய் ஆண்டனி குடும்பத்து ரசிகர்களை அதிகம் பெற்றுள்ளார் என்றும் அவர்கள்தான் ‘பிச்சைக்காரன்’ படத்தை வெற்றிப் படமாக்கியுள்ளார்கள் என்றும் தியேட்டர்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.