சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
‘பேரான்மை, புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசுகிறது இன்னும் பெயரிடப்படாத இப்படம்.
விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்க, அவருடன் இரு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.
விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படங்களில் இந்த படம் அதிக பட்ஜெட் படமாக இருக்கும்.
150 வருடம் பழமை வாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் ஒன்று இப்படத்திற்காக வடிவமைக்கப்பட உள்ளது.
மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. மூணாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.