‘தெறி’ படத்தின் இசை வெளியீடு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விஜய் படம் என்றாலே அவருடைய படங்களில் பாடல்கள் சூப்பர் ஆக இருக்கும் என்பது அவர் நடிக்க வந்த நாளிலிருந்தே நிரூபிக்கப்பட்டு வருகிறது.
பாடல்களுக்கும் அதற்கு விஜய் ஆடும் நடனங்களும் சிறு குழந்தைகளைக் கூட அதிகம் கவரும்.
ஆனால், ‘தெறி’ படத்தின் பாடல்களைப் பொறுத்தவரையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் விஜய் ரசிகர்களைக் கூட திருப்திப்படுத்தவில்லை என்ற செய்திதான் நாலாபுறமும் இருந்து வந்து கொண்டிருக்கிறது.
அதிலும், குறிப்பாக ‘ஜித்து ஜில்லாடி’ என்ற பாடலை அவர் தமிழில் இதற்கு முன் வெளிவந்த பல திரைப்படப் பாடல்களிலிருந்து காப்பியடித்துள்ளார் என வீடியோ ஆதாரங்களுடன் பலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
‘தெறி’ படம் ஜி.வி.பிரகாஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.