‘தெறி’ – அமெரிக்க உரிமை 3 கோடி

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘தெறி‘ படம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

டீசர் வெளியான நாளிலிருந்தே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது, டிரைலர் வெளியானதும் இன்னும் அதிகமாகிவிட்டது.

படத்திற்கான வியாபாரம் ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெளிவந்த விஜய் படங்களை விட ‘தெறி’ படத்தின் வியாபாரம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினி கேலக்ஸி என்ற நிறுவனம் ‘தெறி’ படத்தின் அமெரிக்க உரிமையை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம்தான் ‘கபாலி, 24’ ஆகிய படங்களையும் அமெரிக்காவில் வினியோகம் செய்ய உள்ளது.

‘தெறி’ படத்தின் அமெரிக்க வினியோக உரிமை சுமார் 3 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Read Previous

‘ஜித்து ஜில்லாடி’ – ‘காப்பி’ அடிச்ச ஜி.வி. ?

Read Next

தீபிகா படுகோனுக்குப் பிடித்த தோசை

Most Popular