‘துன்’ ஹிந்தி இசை ஆல்பம் வெளியீடு

ஸ்ரீஜித் எடவானா இசையமைத்து சந்தன் கட்டாரியா பாடல்கள் எழுதியுள்ள ‘துன்’ என்ற ஹிந்தி இசை ஆல்பம் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த ஆல்பத்தை சூரஜ் சந்தோஷ், ஷ்வாஷ்வத் சிங், சப்தபர்னா சக்ரவர்த்தி, ரோஷினி சுரேஷ், நேஹா வேணுகோபால், ஸ்ரீஜித் எடவானா ஆகியோர் பாடியுள்ளார்கள்.

2012ல் ‘யுவ்’ என்ற மலையாள ஆல்பம் ஒன்றிற்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். அந்த ஆல்பத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம் இருவரும் நடித்திருந்தனர்.

‘துன்’ ஆல்பம் சென்னையில் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஒரு இசை ஆல்பம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இந்த ஆல்பம் பற்றி ஸ்ரீஜித் எடவானா கூறியதாவது, “துன்’ ஆல்பம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான எனது கனவுத் திட்டம். இந்த ஆல்பத்தை உருவாக்க எனது மனம், ஆன்மா இரண்டுமே சென்றது. ‘துன்’ என்றால் ரிதம் என்று அர்த்தம். இந்த ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் காதலின் ஏழு வடிவங்களை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

வெஸ்டர்ன் கிளாசிக்கல், ஜாஸ் வகை இசையில் இந்த ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளேன். என்னைப் பொறுத்தவரையில் இசை என்பது திரைப்படங்களுடன் நின்று விடக் கூடாது. ‘துன்’ ஆல்பம் தனிப்பட்ட ஆல்பங்களை அதிகப்படுத்த என்னாலான சீரிய முயற்சி,” என்கிறார்.

Read Previous

Hello Naan Pei Pesuren – Review

Read Next

Zee Tamil – Parambariya Maruthuvam crosses 1000 episodes