விஷால், வடிவேலு நடிக்கும் ‘கத்திச் சண்டை’

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீர சிவாஜி’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் ‘கத்திச் சண்டை’ படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார். இப்படத்தை சுராஷ் இயக்குகிறார்.

நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். விஷால், வடிவேலு இருவரும் ஏற்கனவே ‘திமிரு’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குனர் சுராஜ், வடிவேலு கூட்டணியில் “தலைநகரம், மருதமலை” இரண்டு படங்களுமே அமோக வெற்றி பெற்ற படங்கள்.

தற்போது ‘கத்திச் சண்டை’ படத்தின் மூலம் விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் கூட்டணி சேர்கிறார்கள்.

கதாநாயகி, மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிக்கப்பட உள்ளது.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் சுராஜ் இந்த படத்தை பக்கா கமர்ஷியல் மற்றும் காமெடி படமாக உருவாக்குகிறார்.

‘கத்திச் சண்டை’ படத்தின் படிப்பிடிப்பு இம்மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Read Previous

நட்சத்திர கிரிக்கெட் அணிகளும், கேப்டன்களும் – புதிய தகவல்

Read Next

ஏப்ரல் 8ம் தேதி ‘ஜித்தன் 2’ ரிலீஸ்